ஞாயிறு, 20 நவம்பர், 2016

பார்ப்பனர்களுக்குக்குக் கொடுக்க வேண்டிய தானங்கள்

மஹாபாரதம் ஹரிவம்சம் பார்ப்பனர்களுக்குக்குக் கொடுக்க வேண்டிய தானங்கள் பற்றி பின்வருமாறு கூறுகிறது:

பக்தியுடன் பிராமணர்களுக்கு சிரார்த்தங்கள் கொடுக்கத் தக்கவை. மகாதானங்கள் கொடுக்கத் தக்கவை. பலவித ரத்தினங்களும் கறக்க வெண்கலப் பாத்திரங்களுடன் பசுக்களும். நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும். எல்லா இஷ்டங்களும் குணங்களும் கூடினவர்களுமான கன்னிப்பெண்களும். பலவித விமானங்களும். விசித்திரமான வீடுகளும் ஸ_வர்ணமும் வாகனங்களும். பூமியும். வஸ்திரங்களும். குதிரைகளும். மதங்கொண்ட யானைகளும். படுக்கையும் பல்லக்குகளும். நன்கு அலங்கரிக்கப்பட்ட ரதங்களும் கொடுக்கத்தக்கவை. எந்த எந்த சிறந்த தனம் இருக்கிறதோ அவையும். ஆத்மாவும். மனைவியும் மக்களும் பிராமணர்களுக்குக் கொடுக்கத் தக்கவை.

                               (ஸ்ரீ மஹாபாரதம். ஸ்ரீநரசிம்மப்பிரியா வெளியீடு. 1975)

கன்னிப்பெண்களுடன். மனைவி மக்கள் எல்லோரையும் பார்ப்பனர்கள் தானமாகப் பெற்றிருக்கிறார்கள். தருமன் காடேகியபோது பிராமணர்களும் உடன் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் தருமன் காட்டில் உங்களுக்கு தானமாக வழங்குவதற்கு எதுவுமே இல்லை. எனவே திரும்பிப் போய்விடுங்கள் என்கிறான்.

     அதேபோல இராமாயணத்தில் இராமன். இலக்குமணன். சீதை ஆகியோர் காட்டுக்குச் சென்றபோது தங்களுடைய விலை உயர்ந்த ஆடை. ஆபரணங்கள். அணிகலன்கள். தங்களுடைய சொத்துக்கள். பசுக்கள் அனைத்தையும் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுத்துவிட்டுத்தான் காட்டுக்குச் செல்கின்றனர்

மநு தர்மம் ~பார்ப்பனரல்லாத ஒருவருக்குத் தரப்படும் தானம் சாதாரண பலனையே தரும். எந்த விரதமுமில்லாமல் பிராமணன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவனுக்குச் செய்யப்படும் தானம் இருமடங்கு பலனைத்தரும்.

 வேதம் நன்கறிந்த பார்ப்பனருக்குத் தரப்படும் தானம் நூறு மடங்கு பலனைத்தரும்.

வேதம். வேதபாராயணங்களை நன்கறிந்த பார்ப்பனருக்குத் தரப்படும் தானம் அளவற்ற பலனைத்தரும்|

என்று அத்தியாயம் 7 சுலோகம் 85 கூறுகிறது.

பார்ப்பனர்கள் குடியிருக்கும் பகுதிக்கு அக்கிரஹாரம் என்று பெயர். அக்கிரஹாரம் என்றால் என்ன? அக்கிர என்றால் முதலாவது என்று பொருள். ஹாரம் என்றால் எடுத்துக்கொள்ளல். அரசு வருவாயில் முதலில் வருவதைத் தாங்களே எடுத்துக்கொள்ளல். இதை யார் எழுதியது என்றால் ~சென்னை மாநிலத்தில் நில உரிமைகள்| என்ற சட்டப்படிப்புப் பாடநூலில் 1927ல் டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர் எழுதியது.

இறையிலி நிலங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே சொந்தம். தேவதானம். மகாதானபுரம் எல்லாம் பார்ப்பனருக்கு தானமாக வழங்கப்பட்டவை. அதேபோல் மங்கலங்கள் என்று முடியும் ஊர்கள் எல்லாம் மன்னர்கள் பார்ப்பனருக்கு தானமாக வழங்கியவையே!
இவற்றையெல்லாம் பெறுவதற்கு பார்ப்பனர்கள் என்னென்ன புரோக்கர் வேலை செய்தார்களோ!

இவ்வளவையும் தானமாகப் பெற்ற பார்ப்பனர்கள் யாருக்காவது எதையாவது தானமாக வழங்கியிருக்கிறார்களா?
~தனக்கு ஊழியஞ்செய்யும் சூத்திரனுக்கு பழைய குடை. விசிறி. பாதுகை. தமக்கு உடுத்தத் தகாத கிழிந்த ஆடைகள். மிகுதியான பழைய அன்னம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்| என்று மநு (அ) தர்மம் கூறுகிறது.

பார்ப்பனர்களுக்கு மற்றவர்களிடம் வாங்கித்தான் பழக்கமே தவிர யாருக்கும் இவர்கள் தானமாகக் கொடுத்ததற்கான ஆதாரம் வரலாற்றிலோ புராண - இதிகாசங்களிலோ எங்குமே இல்லை.

தனக்கு ஊழியஞ்செய்யும் சூத்திரனுக்குக்கூடக் கூலியாக தனக்கு உடுத்தத்; தகாத பழைய துணியைத் தரவேண்டுமாம். பார்ப்பனர்கள் எப்படித் துணி உடுத்துவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களாலேயே உடுத்தத் தகாதது என்றால் எப்படி இருக்கும்? இதுதான் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்தது.

இவர்கள் தானம் பற்றிப் பேசலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக