திங்கள், 28 நவம்பர், 2016

தொழிலாளர்கள் மனுதர்மத்தின்படி சூத்திரர்கள்


நம்நாட்டில் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டுக்கும் ஒவ்வொரு கடவுள். கல்விக்கு சரஸ்வதியாம். செல்வத்துக்கு இலட்சுமியாம். வீரத்துக்குப் பார்வதியாம். இவர்களில் யார் ஒஸ்த்தி என்று குஸ்தி போட்ட சினிமாக்கூட வந்தது. சரஸ்வதி சபதமாம்.

இந்த இலட்சுமி கடவுளாக இருந்தும் நம் நாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. கலைஞர் ஆட்சியில்தான் 1989ல் தகப்பன் சொத்தில் பெண்பிள்ளைக்கும் பங்குண்டு என்று சட்டம் போட்டார். அதற்கு அடிப்படை பெரியார் 1929ல் மாநாடு போட்டு பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்று போட்ட தீர்மானம்தான். சரஸ்வதி கல்விக் கடவுளாக இருந்த நாட்டில் சரஸ்வதி என்று பெயர் வைத்திருந்த பாட்டி கைநாட்டு. அவள் பேத்தி இன்று கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

அது மாதிரி தொழிலாளர்களாகப் பிறந்த பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட எவருக்கும் படிப்பு இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இரண்டு பிரிவிலும் பணக்காரன் எவனுமில்லை. இன்றைக்கு வந்திருக்கும் படிப்பும் பணமும் கண்டிப்பாக சரஸ்வதியின் தயவாலோ இலட்சுமியின் தயவாலோ வந்ததல்ல.
நம்நாட்டில் தொழிற்சாலைகள் என்பது அண்மைக் காலமாகத்தான் உருவாகியிருக்கிறது.

அத் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களை நாம் தொழிலாளி என்கிறோம். தொழிற்சாலைகள் வருவதற்கு முன்பும் தொழிலாளர்கள் இருந்தார்கள். அவர்கள் ஜாதித் தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வண்ணார், நாவிதர் குயவர் ஆசாரி பொற்கொல்லர் தட்டார், சக்கிலி, தோட்டி, பள்ளர், பறையர் ஆகிய அனைவரையும் இன்னமும் கிராமங்களில் தொழிலாளி என்றுதான் அழைப்பார்கள்.

அந்தத் தொழிலாளர்கள் மனுதர்மத்தின்படி சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று மனுதர்மம் எட்டாவது அத்தியாயம் சுலோகம் 415 சொல்கிறது.
மன்னராட்சிக் காலத்தில் தொழிலாளர் எவரும் படிக்கவும் கூடாது. செல்வம் வைத்துக்கொள்ளவும் கூடாது. படித்தால் நாக்கை அறுப்பான். செல்வம் வைத்திருந்தால் அதனைப் பிடுங்கிக் கொள்வான். இவையெல்லாம் மனுதர்மத்தில் உள்ள விதியின்படி. அந்த மனுதர்மத்தின்படி தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை. அவன் கெட்டியான ஓடு போட்ட வீடு கட்டிக் கொள்ளக் கூடாது. நல்ல துணிமணி உடுத்தக்கூடாது. பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது. ஆண்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது. இவைதான் அன்றைக்கு சட்டம்.

இந்தத் தத்துவம் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. அதனால்தான் எஞ்சினியர், சூப்பர்வைசர் எல்லோரும் நிரந்தரமாக எடுக்கப் படும்போது தொழிலாளி மட்டும் தற்காலிகமாக எடுக்கப் படுகிறார்கள். இதை நியாயப் படுத்துவதற்குத்தான் ஆயுதபூஜை என்பதே நாட்டில் அறிமுகமானது.

இந்த பூஜை போடுவதால் தொழிலாளிக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. தற்காலிகம் என்பது ரத்தாகாது. தற்காலிகக் காலம் முடிந்தவுடன் எழுத்துத் தேர்வு செய்முறைத்தேர்வு என்பது ஒழியப் போவதில்லை. ஆயுதபூஜை போடுவதால் வராத ஆர்டர்கள் வந்து குவியப் போவதில்லை.PRP என்ற பெயரில் அள்ளிக்கொள்ளும் அதிகாரிகளைப் போல் தொழிலாளிக்கும் இலாபத்தில் பங்கு கிடைக்கப் போவதில்லை.

இந்த ஆயுதபூஜை என்பது முட்டாள்தனத்தையும் மூடத்தனத்தையும் மூலதனமாகக் கொண்டது. எனவேää இந்த அர்த்தமற்ற ஆயுதபூஜையைக் கொண்டாடாதீர்! என்றென்றும் நிரந்தர அடிமையாகாதீர்!                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக