திங்கள், 7 நவம்பர், 2016

நிர்வாகம் இப்ப எதுக்கெடுத்தாலும் பஞ்சப்பாட்டுப் பாட ஆரம்பிச்சிருச்சு



நிர்வாகம் இப்ப எதுக்கெடுத்தாலும் பஞ்சப்பாட்டுப் பாட ஆரம்பிச்சிருச்சு. நஷ்டமாயிருச்சு. அதனால உங்களுக்கு போனஸ் இல்ல. நஷ்டமாயிருச்சு. அதனால உங்களுக்கு OT  இல்ல. நஷ்டமாயிருச்சு. அதனால உங்களுக்கு  Wage Revision இல்ல. என்று எப்பப் பாத்தாலும் புலம்பல். இப்ப அதே மாதிரி நஷ்டமாயிருச்சு அதனால டுஊளு அய் நிரந்தரம் பண்ண முடியாது. கம்பெனி ஆர்டர் பொசிசன் சரியில்ல. அதனால LCS அய் நிரந்தரம் பண்ண முடியாது என்று சொல்லுது. இதே காரணத்த சொல்லி சென்ற ஆண்டு எடுப்பதாகச் சொன்ன ஆர்டிசான் தேர்வை ரத்து செய்தது.

LCS  அய் நிரந்தரம் பண்ண முடியாது ஆர்டிசான் எடுக்க முடியாது என்று சொன்ன நிர்வாகம் இப்ப GATE  தேர்வு மூலமா 50 எஞ்சினியர எடுக்கப் போகுது. அது மட்டும் எப்படி முடியுது?

ஏற்கனவே ஆர்டிசானுக்கு மேற்பார்வையாளருக்கு வேலை நியமனத் தடைச்சட்டம் இருந்தபோதே எஞ்சினியர மட்டும் எடுத்தீங்க. கேட்டா எஞ்சினியர் மட்டும் இருந்தாப்போதும். மத்த வேலையை எல்லாம் சுலபமா முடிச்சிடலாம் என்று சொன்னீங்க. 1997 ஊதிய மாற்றத்தில ஆர்டிசானுக்கும் மேற்பார்வையாளருக்கும் எஞ்சினியருக்கும் ஏற்கனவே இருந்த ஊதிய விகிதத்தை மாத்தி அமைச்சு எஞ்சினியருக்கு பல மடங்கு ஊதியத்;த உயர்த்தினீங்க. கேட்டா Engineers are the  Brain of the Company  ன்னு சொன்னீங்க. அந்த Brain  ம் வடநாட்டானுக்குத்தான் அதிகமா இருக்குதுன்னும் தமிழ்நாட்டுக்கு அது கொஞ்சம் கம்மின்னும் சொல்லி பூராவும் வடநாட்டுக்காரனா எடுத்தீங்க.

அதுவும் பத்தாதுன்னு உலகத்திலயே நம்பர் ஒண்ணா இருக்கிற ஐஐவு யில போய் அதிலயும் நம்பர் ஒன்னா இருக்கிற எஞ்சினியரா எடுத்தீங்க. எங்க SC,BC  மக்களை பொதுப் போட்டியில எடுக்க மாட்டேன்னுட்டீங்க. அவங்களுக்கெல்லாம் தகுதி தெறம கொறச்சல் னு சொல்லிட்டீங்க. சரி BC மக்களுக்கு 27 சதம் எடுக்கனுமின்னு சட்டம் போட்டாச்சு. அத மட்டுமாவது எடுங்க ன்னா அவங்கள எடுத்தா தகுதி போயிரும் தெறம போயிரும்னு 18 சதம்தான் எடுத்தீங்க. மொத்தத்தில 90 சதம் இருக்கிற எங்க SC,BC  மக்கள 40 சதம் மட்டும் எடுத்துட்டு உடம்பெல்லாம் மூளை உள்ள முதல் சாதிக்காரனா முதுகத் தடவித் தடவிப் பாத்து எடுத்தீங்க.

அப்படிப் பாத்துப் பாத்து எடுத்து பக்குவமாப் பணியில் அமர்த்திய அந்த மூளை உள்ளவனெல்லாம் என்ன ஆனான்? அவங்கள யெல்லாம் எடுத்து அவங்க மூளையக் கசக்கிக் கசக்கி ஏசி ரூம்ல உட்காந்துக்கிட்டு திட்டம் போட்டு உழைச்சும் நட்டம் வந்துருச்சு நட்டம் வந்துருச்சின்னு சொல்லுறீங்களே! எப்படி? எப்படி? நஷ்டம் வந்தது எப்படி? அவங்க மூளையெல்லாம் கெட்டுப் போச்சா? எல்லார் மூளையிலயும் வைரஸ் பாதிச்சிருச்சா? அந்த வைரசை போக்குற சாஃப்ட்வேர் நிர்வாகத்திடம் இல்லையா? திட்டங்கள் சரியாப் போடாததனால நட்டம் வந்துருச்சா, இல்ல திட்டம் போட்டு நட்டத்த உருவாக்குறீங்களா?

தொழிலாளிங்க உழைக்கத் தயாராத்தான் இருக்கிறாங்க. அவங்களுக்கு முறையாச் செய்ய வேண்டியதச் செய்யணுமில்லையா? பசு பால் கறக்கனுமின்னா அதுக்கு புல்லுää புண்ணாக்குää தவிடுன்னு வச்சாத்தானே கறக்கும்? நேத்து பால் கொறஞ்சு போச்சு. அதனால இன்னைக்கு புண்ணாக்கு வைக்க மாட்டேன்னு சொன்னா இன்னைக்கு அதைவிடக் கம்மியாத்தான் கறக்கும். அதனால இந்த போனசக் குறைக்கிறதுää ழுவு யக் குறைக்கிறதெல்லாம் கதைக்கு ஆகாது.

அதுபோல இந்த ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யனுமின்னு சொல்லுறப்ப அதே பல்லவியப் பாடாதீங்க. அவங்க முப்பத்தெட்டு வருஷமா உழைக்கிறாங்க. நியாயமாப் பாத்தா இந்த நிறுவனம் அவங்களுக்கு நெறைய கடன் பட்டிருக்குது. இந்த ஒரு வருஷம்தானே நட்டம்னு சொல்லுறீங்க. மத்த 37 வருஷமும் இலாபத்திலதானே போச்சு? அப்பவெல்லாம் ஏன் அவங்கள நிரந்தரம் பண்ணல? இனிமே இலாபமே வராதா? ஆர்டரே கிடைக்காதா? 2005 லே இருந்து ஆர்டிசான் எடுத்தீங்க இல்லையா? நியாயமா அவங்கள நிரந்தர ஊழியரா ஆக்கிட்டுத்தானே மத்தவங்கள எடுத்திருக்கனும்?

அதனால 24ந்தேதி தொழிலாளர் நீதிமன்றத்தில மாண்பமை நீதியரசரிடம் இவர்களுக்கு இவ்வளவு நாள் நாங்க செய்த துரோகத்துக்குப் பிராயச் சித்தமா உடனே நிரந்தரம் செய்ய ஒத்துக்கிறோம் னு எழுதிக் கொடுங்க. அப்பத்தான் உங்ளுக்கும் மனச்சாட்சின்னு ஒன்னு இருக்கிறதா எல்லாரும் நம்புவாங்க! செய்வீங்களா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக