திங்கள், 14 நவம்பர், 2016

அக்காலத்தில் நடந்த சைவ வைணவப் போரில் வைணவர்களுடன் வேண்டுமென்றே சண்டைக்குப் போய் அவர்கள் கோயிலை வலுக்கட்டாயமாக அல்லது வஞ்சனையாகக் கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்திருக்கிறார்கள்

மகாவிஷ்ணுவை. சிவனாக மாற்றி வழிபட்ட அகத்தியர்

திருக்கயிலையில் சிவபெருமான். பார்வதி தேவி திருமணத்தைக் காண மூவுலகத்தவரும் கூடியிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் வடக்கு திசை தாழ்ந்தும். தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதைக் கண்ட ஈசன். குறு முனிவர் அகத்தியரை அழைத்து பூமியை சமமாக்க தென்திசை செல்லும்படி பணித்தார். ஒப்புக்கொண்ட அகத்தியர். சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
                                               
 தென்திசையில் அகத்தியர்

‘ஐயனே! நான் இப்போதே தென்திசை நோக்கி புறப்படுகிறேன். ஆனால் உங்கள் திருமணக் காட்சியை தென்திசையில் எனக்கு காட்டியருள வேண்டும்’ என்றார். தன்னை வணங்கி வேண்டிய அகத்தியரிடம். ‘நீ! தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு செல். அங்குள்ள திரிகூட மலையில். எங்களின் திருமணக் கோலத்தை உனக்கு காட்டியருள்வோம்’ என்று ஈசன் வாக்களித்தார்.  அகத்தியர் தென்திசையை வந்தடைந்தார். பூமி சமநிலை அடைந்தது. ஈசன் கூறியபடி திரிகூட மலைக்கு புறப்பட்டு வந்தார் அகத்தியர்.

திரிகூட மலை என்பது திருக்குற்றாலம் ஆகும். இந்தப் பகுதியில் சிவபெருமானை வழிபடுவதற்காக சிவதலம் ஏதாவது இருக்கிறதா? என்று தேடினார். ஆனால் அருகில் எந்த சிவதலமும் இல்லை. எனவே சிவ வழிபாடு எப்படிச் செய்வது என்று வருத்தம் கொண்டார் அகத்தியர்.
                      
அனுமதியில்லை

இந்த நிலையில் திரிகூட மலையில் பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. பெருமாளை தரிசிக்க எண்ணிய அகத்தியர் கோவிலை நெருங்கினார். ஆனால் உடம்பெல்லாம் திருநீறு தரித்து. கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த அகத்தியரை வைணவர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கவில்லை.

சைவ மத அடையாளம் தரித்தவர்களை உள்ளே விடமுடியாது என்று தடுத்து விட்டனர்.

அகத்தியர் செய்வதறியாது திகைத்துப்போனார். தன் மனக்குமுறலை கொட்டுவதற்காக அருகில் இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தேடி வந்தார். திரிகூட மலையில் தனக்கு நடந்தவற்றை கூறி முருகப்பெருமானிடம் தன் வேதனையை வெளிப்படுத்தினார். அகத்தியர் முன்பாக தோன்றிய முருகப்பெருமான். ‘வைணவ அடியவர் போல் சமயச் சின்னம் தரித்து கோவிலுக்குள் சென்று பஞ்சாட்சரம் ஓதி விஷ்ணுவை. சிவலிங்கமாக்கி வழிபடுங்கள்’ என்று கூறி அங்கிருந்து மறைந்தார்.

பெருமாள் சிவனாக...

முருகப்பெருமான் கூறியபடி. தன் நெற்றியில் திருநாமம் இட்டு. மார்பில் துளசி மாலை அணிந்து வைணவ அடியவர் போல் திருக்குற்றாலத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்குள் சென்றார். அகத்தியர். பின்னர் அங்கிருந்த அர்ச்சகரிடம். ‘பெருமாளுக்கு மானசீக பூஜை செய்ய வேண்டும் சிறிது நேரம் வெளியில் இருங்கள்’ என்று கூறிஇ கருவறைக் கதவை மூடினார்.
                                                                               
கருவறையில் நின்ற  கோலத்தில் இருந்த பெருமாளின் தலையில் கை வைத்து அமுக்கி. ‘குறுகுக... குறுகுக...’ எனக் கூறி சிவபெருமானை நினைத்து தியானித்தார். என்ன ஆச்சரியம்! பெருமாளின் திருமேனி குறுகிப்போய் சிவலிங்கமாய் மாறிப்போனது. சிவனை துதித்து வழிபட்டார் அகத்தியர். வழிபாடு முடிந்ததும் கருவறைக் கதவைத் திறந்து வெளியேறினார்.
 நன்னகரப் பெருமாள்

அப்போது கருவறையில் பெருமாளைக் காணவில்லை. சிவலிங்கம் இருப்பதைக் கண்டு வைணவர்கள் கோபம் கொண்டனர். அகத்தியரை வசை பாடினர்; தாக்கவும் முயன்றனர்.

அதற்குள் அகத்தியர் ஒரு தர்ப்பைப் புல்லை மந்திரித்து விட்டார். அது வைணவர்களைத் தாக்கியது.

இதனால் அவர்கள் அகத்தியரிடம் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். அவர்களிடம்இ ‘மகாவிஷ்ணுவை சங்க வீதியின் தென்மேற்குப் பக்கத்தில் வைத்து வழிபடுங்கள்’ என்று அகத்தியர் கூறினார். அந்த விஷ்ணுவே இன்று ‘நன்னகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

இதையடுத்து அங்கிருந்தே ஈசனின் திருமணக் கோலத்தை கண்டு களித்தார் அகத்தியர்.

பெருமாளாக மாறிய சிவபெருமான் அகத்திய முனிவரால் குற்றாலநாதர் என்று அழைக்கப்பட்டார். பெருமாளைச் சிவனாக மாற்ற தன் கைகளால் தொட்டதால் குற்றாலநாதரின் தலையில் அகத்தியரின் ஐந்து விரல்களும் பதிந்துள்ளதை இன்றும் காணமுடியும்.                                                                        
 தல மரம் சிறப்பு

பிரம்மா. விஷ்ணு. சிவன் என மூன்று சிகரங்கள் குற்றால மலையில் உள்ளன. இவ்வாறு மும்மூர்த்திச் சிகரங்கள் உள்ளதால் குற்றால மலையை திரிகூட மலை என்று அழைக்கிறார்கள். ஊழிக்காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம் இந்த குற்றாலம் ஆகும். ‘கு’– என்பது பிறவிப்பிணி. ‘தாலம்’– என்பது தீர்ப்பது. மனிதனின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவர் குற்றாலநாதர். இந்த ஆலயத்தில் தல மரம் குறும்பலா. திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் எப்படி மலையாக இருக்கிறாரோ. அதே போல் இந்த தலத்தில் குறும்பலாவாக சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். இந்த பலா மரத்தின் கிளைகள்இ கனிகள்இ சுளைகள்இ வித்துக்கள் என யாவும் சிவலிங்க வடிவமாகவே உள்ளது. ‘சுளையெலாஞ் சிவலிங்கம்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி
.          
   கோவில் அமைப்பு

இந்த ஆலயத்தின் நான்கு வாசல்களும் நான்கு வேதங்களாக விளங்குகின்றன. சிறிய அழகிய கோபுரம். குற்றாலநாதர் நடுவே கோவில் கொண்டு விளங்க. அவருக்கு வலதுபுறம் குழல்வாய் மொழியம்மையும். இடதுபுறம் பராசக்தியும் கோவில் கொண்டுள்ளனர். ஆலயம் சங்கு வடிவிலானது. அம்பாளும் சிவனும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். ஐப்பசி மாத பூர நட்சத்திரத்தன்று குற்றாலநாதருக்கும். குழல்வாய் மொழியம்மைக்கும் அகத்தியர் சன்னிதி அருகில் திருமணம் நடைபெறும். ஈசனும். அம்பாளும் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுக்கிறார்கள். இங்குள்ள பராசக்தியே உலகமெல்லாம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தாள். எனவே இங்குள்ள பீடத்தை தரணிபீடம் என்கிறார்கள். பராசக்தியின் சன்னிதியில் தாணுமாலயன் பூந்தொட்டில் ஆடிக் கொண்டிருக்கிறது.  ஆலயத்தில் விநாயகர். முருகர். சூரியன். அகத்தியர். தட்சிணாமூர்த்தி. பஞ்சபூத லிங்கம். சனீஸ்வரர். சிவகாமி அம்பாள் சமேத நடராஜர். துர்க்கை. கைலாசநாதர். அறுபத்து மூவர். நன்னகரப் பெருமாள் என பல சன்னிதிகள் உள்ளன.
தென்காசிக்கு மேற்கு 5 கிலோமீட்டர் தூரத்தில் குற்றாலம் உள்ளது.

–சிவ.அ.விஜய்பெரியசுவாமி. கல்பாக்கம்.

தைல  அபிஷேகம்

திருக்குற்றால நாதருக்கு தினமும் தைல அபிஷேகம் செய்யப்படுகிறது. அகத்தியர் கையால் அழுத்தியதால். சிவனுக்கு தலைவலி ஏற்பட்டதாகவும். அதனைப் போக்கவே இந்த தைல அபிஷேகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தினமும் காலை 9.30 மணிக்கு தைல அபிஷேகம் நடைபெறும். பசும் பால். இளநீர். சந்தனம் மற்றும் 42 வகையான மூலிகைகளை 90 நாட்கள் வேக வைத்து அந்தச் சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கப்படுகிறது. இந்த அபிஷேக தைலம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. வாதநோய். வாத வலி. உடல் வலி. முதுகு வலி. தீராத தலைவலி. வயிற்று வலி. கண் வலி உள்ளவர்கள் இதனை தடவி வந்தால் சுகம்பெறலாம்.



மேலே உள்ள கதை தினத்தந்தி  டிசம்பர் 2013 ஆன்மீக மலரில் வெளிவந்தது.

இது கொஞ்சமாவது அறிவுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கிறதா? சிந்தித்துப்பாருங்கள்.
பெரியார் சொன்ன கடவுள் இல்லை. கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். பரப்புகிறவன் அயோக்கியன். வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு இது நல்ல உதாரணம் அல்லவா?

பரமசிவன் பார்வதியின் திருமணம் உலகத்தின் வடகோடியான கைலாயத்தில் நடைபெற்றதால் அத்திருமணத்தைக் காண மூவுலகத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே கூடியதால் பாரம் தாங்காமல் வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்து விட்டது@ அதனைச் சமன் செய்ய குள்ளமுனியான அகத்தியரை அனுப்பி சிவன் சரிசெய்தான் என்று கதை சொல்லப்பட்டுள்ளதே இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

முதலில் உலகம் தட்டையானதா? என்ற கேள்வி எழுகிறது. அடுத்து உலகின் வடகோடி இமயமலை தென்கோடி கன்னியாகுமரி என்று கூறப்பட்டுள்ளது.

இக்கதை உலகம் தட்டை என்று நம்பிய ஒருவனால் எழுதப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் உலகின் வடகோடி இமயமலை தென்கோடி கன்னியாகுமரி என்று நம்பியவனாக அவன் இருந்திருக்க வேண்டும்;;;;;;;. ஆக இதை எழுதியவன் முட்டாளா? இல்லையா?

முட்டாளைக்கூட நாம் மன்னித்து விடலாம்ஆனால் இந்தக் காலத்திலும் இதனை ஆன்மிகமலரிலும் திரைப்படமாகவும்ää நாடகமாகவும் தயாரித்து அந்தப் புளுகுணிப் புராணங்களை இன்று பரப்புகிறவன் அயோக்கியனா? இல்லையா? இதனைத் தெரிந்து கொள்ளாமலேயே அல்லது தெரிந்தும்; அதைப்பற்றி அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல் வெறும் நம்பிக்கை என்;ற பெயரால் இக்கடவுளை வணங்குகிற மக்களைக் காட்டுமிராண்டி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

இதனைப் பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் சொன்னால் கோபித்துக் கொள்ளும் ப(க்)தர்களே! கோபியாமல் கொஞ்சம் அறிவைப் பயன்படுத்திப் பாருங்கள்!

தென்திசை வந்து உலகைச் சமன்செய்த அகத்தியர் திருக்குற்றாலமலை வந்து சிவன்கோயில் இருக்கிறதா என்று பார்க்கிறார். விஷ்ணு கோயில் மட்டும் இருக்கிறது. வைணவர்கள் அவரை அனுமதிக்கவில்லை என்றவுடன் இன்னொரு இடத்தில் இருக்கும் முருகனிடம் ஆலோசனை கேட்க வைணவபக்தர் வேடம் போட்டு விஷ்ணுவை சிவலிங்கமாக  மாற்றி வழிபட ஆலோசனை சொன்னதாகவும் அதன்படி சென்று விஷ்ணு தலையில் கைவைத்து அழுத்த விஷ்ணு சிவலிங்கமாக மாறியதாகவும் கதை செல்கிறது.

இதையும் ஆராய்வோம். நடக்கின்ற திருமணமோ சிவனுக்கும் பார்வதிக்கும். அவர்களுடைய மகன் முருகன் எப்படி அங்கே வந்தான்? அப்படியானால் அவர்கள் திருமணத்திற்கு முன்பே முருகன் பிறந்துவிட்டானா?

ஏற்கனவே மூவுலகத்தினரும் கைலாயத்தில் கூடியிருக்க பாரம் தாழாமல் தாழ்ந்த பூமியைச் சமன் செய்யத்தான் அகத்தியர் தெற்கே வருகிறார். அப்படியானால் அவருக்கு முன்பே முருகன் அங்கே வந்தானா? சமமற்ற பூமியை அவன் சமன் செய்வதுதானே! அதனை விடுத்து அகத்தியரை ஏன் அனுப்ப வேண்டும்?

இதிலே என்ன நடந்திருக்க வேண்டும் என்றால் அக்காலத்தில் நடந்த சைவ வைணவப் போரில் வைணவர்களுடன் வேண்டுமென்றே சண்டைக்குப் போய் அவர்கள் கோயிலை வலுக்கட்டாயமாக அல்லது வஞ்சனையாகக் கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்திருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. எப்படி அயோத்தியிலுள்ள மசூதிக்குள் இராமன் பொம்மையைக்; கொண்டுபோய் வைத்து இங்கேதான் இராமன் பிறந்தான் என்று இன்று வம்பளக்கிறார்களோ அதேபோன்ற காலித்தனத்தைத்தான் அகத்தியரும் செய்திருப்பார் என்று கருத இடமுள்ளது.

முன்பிருந்த பெருமாள் சிலையை அகற்றி விட்டு சிவலிங்கத்தை வைத்து குறுகுக... குறுகுக என்று பாடியதால் பெருமாள் லிங்கமாக மாறிவிட்டார் என்று கதை விட்டிருக்கிறார்கள். அதனைத் தட்டிக் கேட்டவர்களை தடியால் தாக்கிவிட்டு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப்போட்டான் அந்தத் தர்ப்பைப்புல் அனைவரையும் தாக்கியது என்று கப்சா விடுகிறார்கள். வைணவர்கள் கட்டிய அந்தக் கோயிலுக்குள் சிவலிங்கத்தை வைத்து விட்டு பெருமாளை வேறு ஒரு  இடத்தில் வைத்து வழிபட வைணவர்களை மிரட்டிப் பணிய வைத்திருக்கிறார்கள்.

குறுகுக... குறுகுக என்று அகத்தியர் பெருமாளின் தலையில் அழுத்தியதால் அவரது கைவிரல்களின் தடம் அவர் தலையில் பதிந்துள்ளது என்பது எவ்வளவு கடைந்தெடுத்த பித்தலாட்டம். அந்தச் சிலை கல்லால் ஆனதுதானே! அதுவும் மனிதனால் செய்யப்பட்டதுதானே?

அதில் கைவிரல் தடம்போல் செதுக்கி வைத்துவிட்டு அகத்தியரின் கைவிரல் தடம் என்று புளுகுகிறார்கள்.
அத்தோடு அவர்களது புளுகு நிற்கவில்லை. அவர் கைவைத்து அழுத்தியதால் சிவனுக்கு தலைவலி வந்ததால் அதனைப் போக்க இன்றும் தைல அபிஷேகம் நடைபெறுகிறதாம். அப்படியானால் அந்த சிவன் அகத்தியனைவிடக் கையாலாகாதவனா? அகத்தியன் பெருமாள் தலையில்தானே கைவைத்து அழுத்தினான். தலைவலி பெருமாளுக்குத்தானே வர வேண்டும்? அப்படி வராமல் சிவனுக்கு ஏன் வந்தது?

இதில் இன்னொரு பித்தலாட்டத்தையும் பார்ப்போம்.

அகத்தியன் குறுகுக... குறுகுக என்று அழுத்தியது பெருமாள் தலையில். அது மாறியதோ சிவலிங்கமாக. அகத்தியன் அழுத்தியதால் வலி வந்திருக்குமானால் சிவலிங்கத்தின் மேல்தானே வந்திருக்க வேண்டும்?

சிவலிங்கம் என்பது சிவனின் ஆண்குறிதானே? அந்த ஆண்குறியில்தானே சிவனுக்கு வலி வந்திருக்க வேண்டும்? அதை விடுத்து சிவனுக்கு தலையில் வலி எப்படி வந்திருக்க முடியும்? அழுத்தப்பட்ட ஆண்குறியில் வலி வராமல் அழுத்தப்படாத தலையில் வலி வந்தது என்றால் என்ன பொருள்?

எங்கேயோ அடிச்சான் பல்லு போச்சு என்று கிராமத்தில் பழமொழி சொல்லுவார்களே அதுபோல் அல்லவா இருக்கிறது?


அதைவிட இன்னொரு கப்ஷா அங்கிருந்தே அகத்தியர் கைலாய மலையில் நடந்த சிவனின் திருமணத்தைக் கண்டு களித்தானாம். அப்படியானால் அப்பொழுதே டிவி சானல் இருந்து டைரக்ட் டெலிகாஸ்ட் செய்தார்களா? அல்லது இப்பொழுது இருப்பதுபோல் வீடியோ கான்ஃபரன்சிங் இருந்ததா?

எல்லாம் கப்சாதானே? அவிழ்த்து விடுவோம் என்று அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதையும் தினத்தந்திக் காரன் அச்சுப் போட்டு விற்பனை செய்கிறான் என்றால் இவர்கள் அயோக்கியர்கள்தானே?

இதையெல்லாம் நம்பினால்தான் அது தொடர்புடைய மற்ற அனைத்தையும் நம்ப முடியும். மொத்தத்தில் இந்தக் கதை பெரியார் சொன்னபடி கடவுள் இல்லை. கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். பரப்புகிறவன் அயோக்கியன் வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதனை நிரூபிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக