புதன், 30 நவம்பர், 2016

சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்?

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்!

           ராஞ்சியில் நடந்த மத விழா ஒன்றில் பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்தா பேசும் போது பகவத் கீதையில் 16-ஆவது அத்தியாயத்தில் வர்ணாசிரமம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நான்கு வர்ணங்கள் மனித குலத்தின் நன்மைக்காக உருவாக்கப்பட்டவைகள். அவரவர்கள் அவர்களுக்கான பணியைச் செய்வதே சிறப்பான ஒன்றாகும். இதற்காகத்தான் வர்ண முறையை உருவாக்கினார்கள். ஆனால் இந்த வர்ண முறையை மீறி அதற்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக தற்போது நடந்து வருகிறார்கள்.
                     
அதாவது சனாதனிகள் கோவிலுக்கு நுழைய தடையில்லை, ஆனால் சூத்திரர்கள் தலித்துகள் எப்படி கோவிலுக்குள் நுழையலாம்? வர்ணாசிரம கொள்கையின் படி தூய்மையானவர்கள் மாத்திரமே கோவிலுக்குள் நுழைய முடியும், அப்படி இருக்க தூய்மைப் படுத்தும் பணியில் உள்ளவர்கள் கோவிலுக்குள் நுழைய எப்படி அனுமதிக்க முடியும்? இது அவர்களாகவே புரிந்து கொண்டு கோவிலுக்குள் நுழைவதைத் தவிர்க்கவேண்டும் இது சாஸ்திரத்தில் கூறியுள்ளது. என்று பேசினார்.

                        இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்தியப்பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் கூறியதாவது சங்கராச்சாரியாவின் பேச்சில் எந்த தவறும் இல்லை அவர் சாஸ்திரத்தை மேற்கோள்காட்டிப் பேசினார் என்று கூறியிருந்தார். பூரி சங்கராச்சாரியின் தலித் விரோதப் பேச்சின் காரணமாக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் உயர்சாதியினருக்கும் உள்ள ஜாதி பேதத்தை மேலும் அதிகரித்து ஜாதீய தீண்டாமையைத் திணிப்பவர்களுக்கு துணிச்சலை ஊட்டும் செயலாக இருக்கிறது.
         
ஞாயிறு (19.10.14) பூரி மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்து விட்டனர். சமூகத்தில் ஒருவர் தீண்டாமையை பச்சையாக ஆதரிக்கிறார் அவர் ஒரு மதத்தலைவர் என்றதும் அவருக்கு காவல்துறை சிறப்பு மரியாதை தருகிறது. அவரது பேச்சு சட்ட விரோதமானது என்று காவல்துறைக்கு தெரியவில்லையா? அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்கள் இச்சாமியாருக்கு ஆதரவானவர்களா?
          தேங்கடிஜியும் அம்பேத்காரும் பல நாட்கள் சமுதாயப் பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகவம் அம்பேத்கர் அவர்கள் இந்துமதக் கோட்பாடுகள் எதிலும் தீண்டாமை சொல்லப்படவில்லை என்பதை ஹிந்து சன்னியாசிகள் துறவியர் ஒன்று கூடி பகிரங்கமாக அறிவித்திட வேண்டும் என்று விரும்பியதாகவும் அதனை ஏற்று சமுதாயத்தில் நிலவி வரும் தீண்டாமைக் கொடுமைக்கு சாஸ்திர அங்கீகாரம் கிடையாது என தீர்மானம் இயற்றப்பட்டதாகவும் பிஹெச்இஎல் புருடா மன்னர் சங்கம் 13-10-2014 ல் துண்டறிக்கை வெளியிட்டது.

கெட்டிக்காரன் புளுகுக்கே எட்டு நாள்தான் ஆயுள் என்பார்கள். இவர்கள் புளுகு எட்டு மணி நேரம் கூடத்  தாண்டவில்லை. இவர்கள் உயர்த்திப் பிடிக்கும் கீதையிலேயே தீண்டாமைக்கு ஆதாரம் இருப்பதாகப் போட்டு உடைத்து விட்டார் பூரி சங்கராச்சாரி. அவரது பேச்சை பாஜகவைச்சேர்ந்த ஆளுநரும் ஆமோதித்துள்ளார். அந்த சங்கராச்சாரியுடன் மோடி நெருக்கமாக இருக்கும் படங்கள் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

இப்பொழுது பிஎம்எஸ் என்ன சொல்லப் போகிறது? இந்த பூரிää சப்பாத்தி சங்கராச்சாரிகளெல்லாம் நாங்கள் சொன்ன சன்னியாசிää துறவியர் லிஸ்ட்டில் வரமாட்டார்கள் என்று சொல்லப் போகிறதா? அவருடன் உறவு வைத்திருக்கும் மோடிகள் கேடிகள்மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா? அல்லது அந்த கீதையை பகிரங்கமாக நெருப்பு வைத்துக் கொளுத்தப்போகிறதா? அல்லது நாங்கள் எப்பொழுதும் விடும் புருடா மாதிரி இதுவும் ஒரு புருடாதான் என்று ஒத்துக்கொள்ளப்போகிறதா?

இப்படித் தீர்மானம் இயற்றிய சாதுக்கள்ää துறவியர் யார்? யார்? அவர்களெல்லாம் இப்பொழுது உயிருடன் இருக்கிறார்களா? செத்துப் போய்விட்டார்களா? அவர்கள் இந்த பூரி கொழுக்கட்டை மீது நடவடிக்கை எடுப்பார்களா?

அம்பேத்கர் சொன்னது மாதிரி இந்த பூரி கொழுக்கட்டைகளையெல்லாம் சங்கராச்சாரி பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு ஒரு தாழ்த்தப்பட்டவரை சங்கராச்சாரியாக நியமித்து அவரது காலில் இவர்களெல்லாம் விழுந்து மன்னிப்புக் கேட்பார்களா? இல்லையென்றால் இந்த புருடா மன்னர்கள் தங்களது சங்கத்தைக் கலைத்து விட்டு மொட்டையடித்து கஷாயம் தரித்து சன்னியாசியாகப் போய் கங்கையில் விழுந்து கதிமோட்சம் அடையப் போகிறார்களா?                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக