செவ்வாய், 29 நவம்பர், 2016

சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டச் சொல்வது அறிவுள்ளவன் செய்யும் செயலா?



Matriculation School ma;  CBSE School Mf ஆக மாற்றச் சொல்லி விட்டு நாங்க ஒன்னும் சமச்சீர் கல்வியைக் குறைத்து மதிப்பிடவில்லை என்றுBMS  சொல்வது பித்தலாட்டம்.  RSK யில் இடம் கிடைக்கவில்லை என்றால் அங்கே இடங்களை அதிகப்படுத்து! அனைவருக்கும் இடம் கொடு என்று கேட்காமல் சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டச் சொல்வது அறிவுள்ளவன் செய்யும் செயலா?

 பங்குபெறும் சங்கங்கள் அதற்கான முயற்சி எடுத்து LCS ஊழியர் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் இடம் வாங்கிக் கொடுத்து விட்டார்களா? இல்லையா? தொழிலாளிகள் மீது ரொம்ப அக்கறை உள்ளவன்போல நடிக்க எதையாவது உளறிக் கொட்டிவிட்டு மாட்டிக் கொண்ட உடன் ரொம்ப ரொம்ப யோக்கியன் மாதிரி நடிக்கிறதுதான் உன் பரம்பரைப்புத்தி.

இதைச்சொன்னால் நாங்கள் யாருக்கோ கூலிக்கு மாரடிக்கிறோம் என்கிறாய். யாரிடம் கூலிபெற்றோம்? உன்னைப் போல அம்பானியிடமும் அதானியிடமுமா கூலிபெற்றோம்? எங்களது சொந்த செலவில் எங்கள் வீட்டு சோற்றைத் தின்றுவிட்டு சமுதாயப்பணி செய்கிற எங்களைப்பார்த்து கூலிக்கு மாரடிப்பவர்கள் என்பது பித்தலாட்டம்.

ஏற்கனவே நாங்கள் சவால் விட்டோம் “நாங்கள் கூலி வாங்குவதை நீ நிரூபித்தால் எங்கள் சங்கத்தைக் கலைத்து விடுகிறோம். இல்லையென்றால் உனது சங்கத்தைக் கலைத்துவிடத் தயாரா? என்று கேட்டோம். அதனை இன்னும் நீ நிரூபிக்கவும் இல்லை. உங்கள் சங்கத்தைக் கலைக்கவும் இல்லை. அதெல்லாம் மானம்ää ரோஷம் உள்ளவன் செயல் என்கிறாயா?

உன்னுடைய BMS திலகர் பிறந்தநாளில் தொடங்கப்பட்டதாகப் பெருமையாகக் கூறுகிறீர்களே! அந்தத் திலகர் என்ன கூறினார்?
தொடக்கக் கல்விக்குப்பின் இடைநிலைக் கல்வியைத் தொடர வேண்டாம் என்று தீண்டத் தகாத மக்களுக்குக் திலகர் ஆலோசனை கூறினார். இதன்மூலம் தீண்டத் தகாத மக்களின் ஜாதித் தொழில்களை அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை நம்பிய திலகர்ää அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப்படுவதை எதிர்த்தார். இவ்வாறு பார்ப்பனர் மட்டுமே படிக்க வேண்டும். பார்ப்பனரல்லாதார் தொடக்கக் கல்விக்கு மேல் படிக்கக் கூடாது என்று சொல்லும் பார்ப்பனக் கூட்டத்துக்குக் கைக்கூலியாக இருக்கும் நீங்களா எங்களைப் பார்த்து கூலிக்கு மாரடிக்கிறோம் என்பது?

அடுத்து விவேகானந்தருக்கு விழா எடுக்கிறீர்களே! அவர் என்ன தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களெல்லாம் IIT, AIMS, NITஎல்லாவற்றிலும் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிறாரா?
~ஸகஜம்கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்| என்ற கீதை வாக்கியத்தைச் சொல்லி மீனவன் மீனவனாகவும், குயவன் குயவனாகவும், விவசாயி விவசாயியாகவும்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையா? (ஆதாரம் : பெல் நிர்வாகம் வழங்கிய பாரதமே உயிர்த்தெழு)

அதே நூலில் ஒரு சக்கிலியன் ஒரு பிராமணனைப் பார்த்து ~உங்களால் செருப்புத் தைக்க முடியுமா? என்னால்தான் நாட்டை ஆள முடியுமா?| என்று கேட்பதுபோல் கேட்டு செருப்புத் தைப்பவனுக்கு நாட்டை ஆள்வதைப் பெருமையாகச் சொல்லாமல் செருப்புத் தைப்பதைப் பெருமையாகச் சொல்கிறாரே!
அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி தன் மகனை IIT,AIMS,IIM எல்லாவற்றிலும் சேர்ந்து படிக்கவைக்க உன்னுடைய RSSஒத்துக் கொள்கிறதா?

அங்கே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வந்தபோது உன்னுடைய RSS குடும்ப அமைப்பான ABVP என்ன செய்தது?

நீங்களெல்லாம் படிக்க இங்கே வந்துவிட்டால் செருப்புத் தைப்பது யார்? வீதி கூட்டுவது யார்? என்று கூறி வீதியில் விளக்குமாற்றைப் பிடித்துக்கொண்டு போராடவில்லையா?

அப்படிப்பட்ட அமைப்பின் கைக்கூலியான நீ ஏதோ அனைத்துத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் மேல்படிப்புக்காக உருகுவதுபோல் நடிப்பது யாரை ஏமாற்ற?

இதற்கு ரொம்ப ரோஷமாகப் பதில் சொல்லும் நீ ஏற்கனவேBJP க்கும் உனக்கும் சம்மந்தமில்லை என்று சொன்னபோது BJP சார்பாக ரங்கராஜன் குமாரமங்கலம், சுகுமாறன் நம்பியார், லலிதா குமாரமங்கலம் எல்லோரும் தேர்தலில் நின்றபோது வாயிற்கூட்டம் ஏற்பாடு செய்து கொடுத்தாயா? இல்லையா? என்று கேட்டதற்கு ஏன் இதுவரை பதில் சொல்லவில்லை?

அவர்களிடம் வாங்கிய கூலி இன்னும் உங்கள் வாயில் அடைத்துக் கொண்டிருக்கிறதா?

1997க்குப் பிறகு இதுவரை ஒரு தேர்தலிலும் ஜெயிக்காத நீங்கள் உங்கள் அலுவலகத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு இருப்பது ஏன்? நிர்வாகம் இழுத்துப் பூட்டி உங்களை வீதியில் துரத்திய பிறகு எதைக் காட்டி அந்த அலுவலகத்தை கூலியாக மீண்டும் பெற்றாய்? உனக்கு மானம் வெட்கம் சூடு சொரணை ஒழுக்கம் நாணயம் ஏதாவது ஒரு குண்டூசி முனையளவாவது இருந்தால் அந்த அலுவலகத்தைக் காலி செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று அதன் பிறகு அந்த அலுவலகத்தைப் பயன்படுத்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக