செவ்வாய், 8 நவம்பர், 2016

வாஜ்பேய் மற்றும் பாஜக வின் தெறமை?



வாஜ்பேய் தலைமையில் பிஜேபி ஆட்சி நடந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58ல் இருந்து 60 ஆக மாற்றினார்கள். இது ஒரு நிர்வாகத் தெறமை என்றும் பாரத ரத்னா கொடுக்க அது ஒரு தகுதி என்றும் சங்க் பரிவார் அமைப்புகள் நீட்டி முழங்குகின்றன.

இது எவ்வளவு பெர்ர்ரிய நிர்வாகத் தெறமை? ஓய்வு வயதை உயர்த்துவதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
தற்பொழுது (அதாவது அப்பொழுது) மத்திய அரசுப் பணியில் இருந்து நிறைய ஊழியர்கள் ஓய்வு பெற இருக்கிறார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவதால் அவர்களுக்குப் பணிக்கொடை கொடுக்க பணம் இல்லை. அதனால் இந்த ஓய்வு வயதை அறுபது ஆக மத்திய அரசு உயர்த்துகிறது என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லி ஆறே மாத காலத்தில் விருப்ப ஓய்வு என்று கொடுத்து அய்ந்து ஆண்டு காலத்திற்கு அந்த ஊழியர்கள் செய்யாத வேலைக்கும் சம்பளம் கொடுத்து அனுப்பினார்கள்.
58 வயதில் ஓய்வு பெறுகிறவர்களுக்கு அவர்கள் பணிசெய்த காலத்திற்கே கொடுக்க பணம் இல்லை என்ற சொன்ன அரசாங்கத்திடம் ஆறே மாதத்தில் பணி செய்யாமலேயே பணிக்கொடையும் கொடுத்து மேலும் அய்ந்து ஆண்டு காலத்திற்கு வேலை செய்யாத காலத்திற்கும் சம்பளம் கொடுத்து அனுப்ப எங்கிருந்து பணம் வந்தது?

பணம் இல்லை என்று சொன்னதெல்லாம் ஒரு சாக்குத்தான். 58 வயதில் ஓய்வு பெறுகின்ற எந்த ஊழியரும் என்னுடைய ஓய்வு வயதை உயர்த்துங்கள் என்று கேட்கவில்லை. அவனுடைய எதிர் பார்ப்பு எல்லாம் தனக்குப் பிறகு தன்னுடைய வாரிசுகளுக்கு ஏதோ ஒரு வேலை அதுவும் அரசு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான். ஆனால் அந்த வாரிசுக்கு வேலை தராமல் 58 முடிந்த ஊழியரையே தொடர்ந்து பணி செய்யச் சொல்வது இளைஞர்களுக்கான வேலையைத் தட்டிப் பறிப்பதுதான். 60 வயது ஆக்கி ஆட்களைக் குறைப்பதாகச் சொல்லி விருப்ப ஓய்வு கொடுத்த போது அதில் சென்றவர்கள் 90மூ பேர் மூன்றாம்நிலைää நான்காம் நிலை ஊழியர்கள்தான். அதிக சம்பளம் பெற்ற முதல்நிலைää இரண்டாம் நிலை அதிகாரிகள் யாரும் பணி ஓய்வில் செல்லவில்லை. குறைந்த சம்பளம் பெற்ற ஊழியர்களை அனுப்பி விட்டு அதிக சம்பளம் பெற்ற அதிகாரிகளை வைத்துக் கொண்டதன் பின்னணி என்ன?

விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் எத்தனை சதவிகிதம் பேர் கடைசிக் காலத்தை நிம்மதியாகக் கழித்தார்கள் என்று கணக்கெடுத்தால் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள்தான் கிடைக்கும். கொண்டு சென்ற பணம் பெண்ணின் திருமணம் பையனின் படிப்பு என்று காலியாகி இருப்பதையும் இழந்து பல தோழர்கள் பரிதாப நிலைக்குச் சென்றார்கள் என்பதுதான் எதார்த்தம்.
உண்மையில் ஓய்வு வயதை உயர்த்;தியதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன தெரியுமா?
வாஜ்பேய் ஆட்சிக் காலத்தில் அனைத்து அதிகார மட்டங்களும் பார்ப்பனர்களால் நிரம்பி இருந்தது. பிரதமர் அலுவலகம்ää ஜனாதிபதி அலுவலகம்ää அமைச்சரவை செயலகங்கள்ää முதன்மைச் செயலாளர்கள்ää மாவட்ட ஆட்சியர்கள்ää அய்ஏஎஸ் அதிகாரிகள் முழுக்க பார்ப்பனர்களாக இருந்தார்கள். ஏனெனில் அவர்களெல்லாம் 1960க்கு முன்பு பணிநியமனம் பெற்றவர்கள். அப்பொழுது இட ஒதுக்கீடு என்பதே இல்லை. பிற்படுத்தப்பட்டவர் யாருமே அதிகார மிக்க பதவியில் இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு சிலர் மட்டும் இருந்தார்கள். பதவியில் இருந்த பார்ப்பனர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பாஜக சார்புடையவர்கள். அவர்கள் ஒரே நேரத்தில் பணி ஓய்வு பெற்றுவிட்டால் தங்களது கொள்கைப்படி ஆட்சி செலுத்த இயலாமல் போய்விடும்.

அத்துடன் அவர்களை அனுப்பி விட்டால் அனைத்துப் பதவிகளிலும் இட ஒதுக்கீட்டின்படி 27 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்களையும் 22.5 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்டவர்களையும் நியமித்தாக வேண்டும். அதாவது ஒரு லட்சம் பேர் நியமனம் பெற்றால் அதில் 27000 பேர் பிற்படுத்தப்பட்டவர்களும் 22500 பேர் தாழ்த்தப்பட்டவர்களும் இடம் பெற்று விடுவார்கள். அத்துடன் திறந்த போட்டியிலும் அவர்களே வந்து விடுவார்கள். பார்ப்பனர் எண்ணிக்கை குறைந்து விடும்.
அப்பொழுது மூன்றரை இலட்சம் பேர் ஓய்வு பெறுவதாக இருந்தது என்றால் எண்ணிப் பாருங்கள். அவர்களையெல்லாம் அனுப்ப பிஜேபி அரசுக்கு மனமில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது. பிற்படுத்தப்பட்ட – தாழ்த்தப்பட்ட இளைஞர்களையும் உள்ளே நுழைய விடாமல் செய்து விடலாம். அதே நேரத்தில் தங்களுக்கு சாதகமாக இருந்த பார்ப்பன அதிகாரிகளையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.

எப்படி வாஜ்பேய் மற்றும் பாஜக வின் தெறமை?  இது நல்ல நிர்வாகத் தெறமைதான். யாருக்கு? பார்ப்பனர்களுக்கு! பார்ப்பனரல்லாத மக்களுக்கு? அந்தத் தெறமைக்கு பாரத ரத்னா மட்டுமா கொடுப்பார்கள்? அதற்கு மேலும் கொடுப்பார்கள்! கண்டுகொள்வீர் காவிகளை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக