புதன், 9 நவம்பர், 2016

பெருமைமிகு தமிழில்பேசி இனிமை காணுவோம்!

அமுதான தமிழில் அம்மா என்றழைத்தால்
ஆனந்தம் உண்டு இனிமையும் உண்டு    
  நமதல்லா மொழியாம் ஆங்கிலம் தன்னில்
நமைப்பெற்ற தாயை மம்மி என்றழைத்தால்                                         நமக்கில்லை பெருமை தாய்மைக்கும் சிறுமை
மம்மியென்ற சொல்லுக்கு பிணமென்ற பொருளாம்                
நமக்கிது தேவையா? நம்மொழிக்கிது பெருமையா?
அம்மா என்றழைத்தே அன்பினைப் பெறுவோம்!
இல்லாத மனிதன்தான் இரவல் வாங்குவான்
இழிவாக இருந்தாலும் பெருமை கொள்ளுவான்                  
பொல்லாத பிறமொழிச்சொல் இரவல் வாங்கி
புதுப்பிக்கும் அவசியம் தமிழுக் கில்லை                        
  கல்லாத மக்கள்தூய தமிழில் பேசுவார்
கல்விகற்ற சீமான் பிறமொழியை நாடுவார்                
பொல்லாத போக்குஇது புறத்தில் தள்ளுவோம்
பெருமைமிகு தமிழில்பேசி இனிமை காணுவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக