புதன், 9 நவம்பர், 2016

எதற்காக சரசுவதி பூஜை?

அமைச்சரவையில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர் இருப்பதுபோல் சரசுவதிதான் கல்விக்குக் கடவுளாம்.  அந்த அமைச்சர் சரியாக வேலை செய்யவில்லை போல் தெரிகிறது.

சரசுவதி என்ற பெயர் கொண்ட பாட்டி கைநாட்டுப் பேர்வழி. சரசுவதி என்ற பெயர்கொண்ட அவருடைய பேர்த்தி இன்று கம்யூட்டர் எஞ்சினியர். பாட்டி காலத்தில் சரசுவதி மெடிக்கல் லீவு போட்டிருந்தாளோ? இல்லை வெளிநாடு சென்றிருந்தாளோ? அந்த பிரம்மாவுக்கே வெளிச்சம்.

  சரசுவதியின் அழகில் வேறு யாரும் மயங்கி அவளைத் தள்ளிக்கொண்டு போய் விடக் கூடாது என்பதற்காக பிரம்மா அவளைத் தன் வாயிலேயே வைத்துப் பூட்டிக் கொண்டானாம். அதனால்தான் அவள் நாமகள் என்று போற்றப்படுகிறாள் என்று கதை விடுவர் புராணப் பிரசங்கிகள்.

  ஆனால் இன்றைக்கு நன்றாகப் படித்து ஞானம் உள்ளவர் நாக்கிலும் சரசுவதி குடியிருப்பதாகக் கதை விடுகின்றனர். அடுத்தவர் நாவில் குடியேற பிரம்மா எப்படி அனுமதித்தாரோ?

  சரசுவதிதான் படிப்புக்குக் காரணம் என்றால் பாட்டி படிக்கவில்லை. பேத்தி மட்டும் படித்திருக்கிறாரே எப்படி? இதுபற்றி அம்பேத்கர் எழுதுகிறார் ,படியுங்கள்
:
 ~பண்டைக்காலத்தில் கல்வி என்பது வேதப்படிப்பாகும். சூத்திரனுக்கு வேதம் படிக்கும் உரிமை கிடையாது. இதுதான் மனு விதித்த விதியாகும். வேதம் படித்தால் சூத்திரனுக்கு மட்டுமல்ல அவனுக்குச் சொல்லித் தருபவனுக்கும் தண்டனை உண்டு.
 வேதம் படித்த சூத்திரனுக்குத் தரும் தண்டனையில் மனுவின் சீடர்கள் அவனையும் மிஞ்சி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, தற்செயலாக வேதத்தைக் கேட்கும் அல்லது வேத வார்த்தையை உச்சரிக்கும் சூத்திரனின் நாக்கை இருமுறை வெட்ட வேண்டும். அவன் காதுகளில் காய்ச்சிய ஈயத்தை ஊற்ற வேண்டும் என மனுவின் சீடர்களில் ஒருவரான காட்யாயனர் என்பவர் அறிவித்துள்ளார்|

என ~பார்ப்பனீயத்தின் வெற்றி| என்ற நூலில் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

  வேதத்தை உச்சரிக்கும் சூத்திரனின் நாக்கை வெட்ட வேண்டும் என்று சொன்னபோது வந்து நாக்கில் வசிக்காத சரசுவதி இப்பொழுது எப்படி வந்து குடி புகுந்தாள்? பார்ப்பனரல்லாத படித்தää பதவியிலுள்ளவர்களை இப்பொழுது பார்ப்பனப் பெண்கள் மணம் முடித்துக் கொள்கிறார்களே! அதுபோலவா?

  படிக்கவே கூடாது என்கிறபோது பள்ளிக்கூடம் எங்கே வரும்? அப்புறம் எப்படிப் படிப்பு? வெள்ளைக்காரன் வந்த பிறகு பள்ளிகளைக் கட்டினான். எல்லோருக்கும் பொதுவாக அதை அமைத்தான். தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் அதில் சேர்ந்து படிக்க பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன உயர் ஜாதியினரும் கூச்சல் போட்டார்கள். தாழ்த்தப்பட்டவனுக்குத் தனிப்பள்ளிக் கூடம் கட்ட வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்கினார்கள்.

 தந்தை பெரியாரால் ஆதரிக்கப்பட்டு 1919 முதல் 1938 வரை ஆட்சி செய்த நீதிக்கட்சியினர்தான் தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொள்ளாத பள்ளிக் கூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்றனர். அதனால் அனைவருக்கும் கல்வி கிடைத்தது.
  தாழ்த்தப்பட்டவர்ää பிற்படுத்தப்பட்டவர்ää பார்ப்பனர்ää முஸ்லிம்ää கிறிஸ்தவர் என அனைவருக்கும் கல்வி- வேலை வாய்ப்பு இரண்டிலும் சுதந்திரம் வரும்வரை தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருந்தது.

  சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல் சட்டத்தை எழுதிய அம்பேத்காராலேயே அந்த சட்டத்தைப் பாதுகாக்க முடியவில்லை. அவருடன் அரசியல் சட்டத்தை எழுதிய அல்லாடி கிருஷ்ணசாமி என்ற அய்யங்கார், நீதிமன்றத்திலே வாதாடி வேலைவாய்ப்பில் வேண்டுமானால் இட ஒதுக்கீடு இருக்கலாம். கல்வியில் கூடாது என்ற தீர்ப்பைப் பெற்றார். கல்வி இல்லாமல் வேலைவாய்ப்பு எப்படிக் கிட்டும்? இது எப்படி இருக்கிறது எனில்ää தண்ணீர்த் தொடடி கட்டலாம்: ஆனால் அதில் தண்ணீரை ஏற்றக் கூடாது என்று சொல்வதுபோல இருந்தது.

  கொதித்தெழுந்தார் தந்தை பெரியார். கடுமையான கிளர்ச்சி நாடெங்கிலும். பிரதமர் நேருவும் சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஆலோசித்தனர்.. பெரியாரின் கிளர்ச்சியில் உள்ள நியாயத்தை உணர்ந்தனர். இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் நடைபெற்றது.

  அந்தச் சட்டம் மட்டும் திருத்தப்படவில்லை எனில் எத்தனை முறை சரசுவதி வந்து முட்டினாலும்ää தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி ஒரு கானல் நீரே!

     இப்பொழுது சொல்லுங்கள்! நமது மக்கள் கல்வி பெற்றதற்கு பெரியாரின் போராட்டத்தால் நடைபெற்ற சட்டத் திருத்தம் காரணமா? பிரம்மாவின் மகளும் மனைவியுமான சரசுவதி காரணமா? பின் எதற்காக சரசுவதி பூஜை? சிந்திப்ப்Pர்!
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக