சனி, 12 நவம்பர், 2016

RSS,BJP இந்து முன்னணிக் கூட்டம். இந்துக்களின் பிரதிநிதிகளா?



திக காரன் இந்துக்களை மாத்திரம்தான் எதிர்க்கிறான். முஸ்லிமையம் கிறிஸ்துவனையும் எதிர்க்கறதில்லன்னு ஒரு பிரச்சாரத்த இ.முன்னணி பிஜேபி, ஆர்எஸ்எஸ் போன்றவை திட்டமிட்டுப் பரப்பி வருது. முதலில் இவங்க எல்லா இந்துக்களுக்குமான பிரதிநிதியா? இந்துக்கள் எல்லோருக்கும் பாடுபடுறவங்களா? இந்துக்கள் அனைவரது முன்னேற்றத்துக்கும் உழைக்கிறவங்களா? இந்துக்கள் அனைவரையும் சமமா நடத்துறவங்களா?

இந்துமதம் என்றாலே அது ஏற்றத் தாழ்வுள்ள மதம்தான். எல்லோருக்கும் மேலே பிராமணன். அவனுக்குக் கீழே சத்திரியன். அவனுக்குக் கீழே வைசியன். இந்த மூன்று பேருக்கும் கீழே சூத்திரன் என்ற பேதத்தை உருவாக்கியதே இந்து மதம்தான்.

பிராமணன்தான் எல்லோரையும் விட உயர்ந்தவன்.
மற்றவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் எனற கோட்பாட்டை விதைத்து பாதுகாத்து பராமரித்து வருவதே இந்துமதம்தான். சூத்திரன் என்பவனைக் கடைசியில் வைத்து அவனுக்கு எந்த உரிமையும் இல்லை. அதாவது கல்வி கற்க உரிமையில்லை. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுத்தலாகாது என்பது மனுதர்மம். அதே போல அவன் செல்வம் சேர்க்கத் தகுதி உள்ளவனாக இருந்தாலும் அவனுக்கு செல்வம் சேர்க்க உரிமையில்லை என்பது இந்து மதம்.

அந்த சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன். அதாவது தாழ்த்தப்பட்டவன். ஆடு மாடு பன்றி நாய் நடக்கும் வீதியில் இந்து என்று சொல்லக் கூடியவ பஞ்சமன் நடக்கக் கூட அனுமதியில்லை. இந்த மனுதர்மத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் கூட்டம்தான் RSS,BJP, இந்து முன்னணிக்கூட்டம்.

இந்தப் பஞ்சமனுக்கும் சூத்திரனுக்கும் கல்வி வேலைவாய்ப்பு வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம். தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது இந்துக்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தந்தை பெரியார் கோரிக்கை வைத்தது யாருக்காக? முஸ்லிம்களுக்கா? அல்லது கிறிஸ்தவர்களுக்கா? இந்துக்களுக்குத்தானே? அப்படியிருக்க பெரியாரை இந்துக்களின் எதிரியாகச் சித்தரிப்பது யாரை ஏமாற்ற?

அந்த RSS,BJPஇந்து முன்னணி ஆகியவற்றின் முன்னோடி திலகர் இந்த இந்துக்களான பிற்படுத்தப்பட்டவனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும் உயர் கல்வி கூடாது என்று சொன்னவர்தானே?

அதேபோல பெரியாரும் திராவிட இயக்கமும் சட்ட மன்ற நாடாளுமன்றங்களில் பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டபோது அதே திலகர் என்ன சொன்னார் தெரியுங்களா?

எண்ணெய்க் கடைக்காரர்களும் புகையிலைக் கடைக்காரர்களும் வண்ணார்களும் மற்றவர்களும் (பார்ப்பனரல்லாதாரை இப்படித்தான் அவர் வர்ணித்தார்) சட்டமன்றத்துக்குச் செல்ல ஆசைப்படுவது ஏன் என்று தனக்குப் புரியவில்லை என்றார். அவரது கருத்துப்படி இவர்களது வேலை சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தவிர சட்டங்களை இயற்றும் அதிகாரத்துக்கு ஆசைப்படுவது அன்று என்பதாகும்.

இந்தத் திலகர் வழிவந்த RSS,BJP இந்து முன்னணிக் கூட்டம் இந்துக்கள் அனைவருக்கும் ஆதரவானவர்கள் இந்துக்களான பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்காகப் போராடிய பெரியாரும் பெரியார் தொண்டர்களும் இந்துக்களுக்கு எதிரியா?

முஸ்லிம்களை விரட்ட வேண்டும், கிறிஸ்தவர்களை ஒழிக்க வேண்டும் என்று அப்பாவி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மதவெறி ஊட்டிய கூட்டம் அதே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் கூடாது கூடாது, கூடவே கூடாது. தகுதி திறமைதான் முக்கியம். பார்ப்பனர்களுக்குத்தான் தகுதி திறமை இருக்கிறது என்று எதிர்த்த கூட்டம்தான் இந்த RSS,BJP இந்து முன்னணிக் கூட்டம்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்த கூட்டம்தான் RSS,BJP இந்து முன்னணிக் கூட்டம். இவர்கள் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்.-- இந்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்பதற்காக 16 மாநாடுகளையும் 42 போராட்டங்களையும் நடத்திய திராவிடர் கழகம் இந்துக்களுக்கு எதிரியா?

அனைத்து ஜாதியிலுள்ள இந்துக்களும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று குரல் கொடுத்தால் கூடாது பார்ப்பனர்களுக்கே அந்த உரிமை என்பவர்கள் இந்துக்களின் பிரதிநிதிகளா? அந்த இந்துக்கள் அனைவரும் ஜாதி பேதமின்றி அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்று போராடும் திராவிடர் கழகம் இந்துக்களுக்கு எதிரியா? சிந்திப்பீர்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக