திங்கள், 28 நவம்பர், 2016

திதொக ஏன் பிஎம்எஸ் அய் மட்டும் எதிர்க்கிறது?





திதொக ஏன் பிஎம்எஸ் அய் மட்டும் எதிர்க்கிறது?

ஏனென்றால், அது ஒன்றுதான் மதவெறியைத் தூண்டி நாட்டில் ரத்த ஆறு ஓடச்செய்யும் RSS ன் அமைப்பு

அது ஒன்றுதான் 44 தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தி தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கும் BJP யின் சகோதர அமைப்பு.

அது ஒன்றுதான் சாதியைப் பாதுகாக்க வேண்டும் மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று சொல்லுகிற அமைப்பு.

அது ஒன்றுதான் அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க பெல்லில் இருந்து ஆட்களை அனுப்பிய அமைப்பு.

அது ஒன்றுதான் ராமர் கோயில் கட்ட இங்கிருந்து செங்கல்லை அனுப்பிய அமைப்பு

அது ஒன்றுதான் சேதுசமுத்திரத்திட்டத்தை எதிர்க்கின்ற அமைப்பு

அது ஒன்றுதான் இஸ்லாமியரையும் கிறித்துவர்களையும் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று சொல்லும் மதவெறி அமைப்பு

அது ஒன்றுதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வேலைவாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்லுகின்ற அமைப்பு.

அது ஒன்றுதான் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் புகுத்தி தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்க நினைக்கும் அமைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக