புதன், 30 நவம்பர், 2016

இராமராஜ்யத்தில் சூத்திரன் சாமியாராக முடியுமா?



இராமராஜ்யத்தில் இராமன் அரச சபையைக் கூட்டி மக்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்ததாக எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அவன் அரச சபையைக் கூட்டி மக்கள் குறைகளைக் கேட்டது ஒரே ஒரு முறைதான் என்று அண்ணல் அம்பேத்கர் இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதுதான் சூத்திரனான சம்பூகவதம்.

இராமனுடைய அரண்மணைக்கு பார்ப்பனர்கள் ஒரு அய்ந்து வயது சிறுவனுடைய பிணத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். இராமா! உன்னுடைய ஆட்சியில் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கி விட்டது@ அதனால்தான் பிராமணச் சிறுவன் இறந்து விட்டான் என்று முறையிடுகிறார்கள். இராமன் அப்படி என்ன அதர்மம் நடந்துவிட்டது? என்று கேட்டபோது சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளை வணங்குவதற்காக தவம் இருக்கிறான். தர்மம் என்பது அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்வதுதான். சூத்திர சம்பூகன் பிராமணர்களாகிய எங்களைத்தான் கடவுளாக வணங்க வேண்டும். அவனே நேரடியாக கடவுளை வணங்கக் கூடாது.

அப்படியிருக்க சம்பூகன் கடவுளை நோக்கி தவமிருப்பது தர்மத்துக்கு விரோதமானது. அதனால் அந்த சூத்திரனை நீ கொல்ல வேண்டும் என்று இராமனுக்கு (அதாவது அரசனான கடவுள் இராமனுக்கு) பிராமணர்கள் உத்தரவு போடுகிறார்கள். இராமன் மறுமொழி பேசாமல் நேராகக் காட்டுக்குச் சென்று தவம் செய்து கொண்டிருக்கும் சம்பூகனை வாளால் வெட்டிக் கொலை செய்கிறான். அவனைக் கொன்றவுடன் பிராமணச் சிறுவன் உயிர் பெற்று எழுந்து விடுகிறான். இராமனின் இந்த செய்கையைப் பாராட்டி வான லோகத்து தேவர்கள் எல்லாம் இராமனுக்கு மலர்மாலை தூவி வாழ்த்துகிறார்கள் என்று வால்மீகி இராமாயணம் கூறுவதாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால் இன்று இராமராஜ்யம் அமைக்கப் போவதாகச் சொல்லும் பிஎம்எஸ் கடந்த மாதம் நடந்த வாயிற்கூட்டத்தில்; தாழ்த்தப்பட்டவர் ஒருவர் ஒரு மடம் அமைத்து அதன் தலைவராக இருப்பதாகவும் அவர் தீண்டாமையை ஒழிக்க நான் அக்கிரஹாரத்துக்கு வருகிறேன் என்றும் கூறினாராம். உடனே ஆர்எஸ்எஸ் அவரை அழைத்துக்கொண்டு அக்கிரஹாரத்துக்குச் சென்றதாம். நாற்பது நாட்கள் அக்கிரஹாரத்தில் அவர் தங்கினாராம். பிராமணர்கள் எல்லாம் அவரை வரவேற்று அவருக்கு பாதபூஜை செய்தார்கள் என்கிறது.

அண்ணல் அம்பேத்கர் மதம் மாறப்போவதாகச் சொன்னபோது ஆர்எஸ்எஸ் காரர்கள் அவரிடம் சென்று நீங்கள் மதம் மாற வேண்டாம். நீங்கள் சொல்லுகிற சீர்திருத்தங்களை இந்து மதத்தில் செய்கிறோம் என்று சொன்னார்களாம். அதற்கு அம்பேத்கர் அவர்கள்ää ~ஒரு தாழ்த்தப்பட்டவரை சங்கர மடத்துக்குத் தலைவராக்கி அவருடைய பாதங்களில் பிராமணர்களை விழுந்து வணங்கச் சொல்லுங்கள். நான் உங்களுடைய கோரிக்கையைப் பரிசீலிக்கிறேன்| என்று கூறினார். வந்தவர்கள் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவிட்டார்கள். இன்னமும் அந்தக் கோரிக்கை அப்படியே இருக்கிறது. இது அம்பேத்;கர் வரலாறு திரைப்படத்திலேயே காட்டப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர் தானாக ஒரு மடத்தைக்கட்டி தானே அந்த மடத்தின் தலைவராக இருக்கிறாரே தவிர அம்பேத்கரின் கோரிக்கைப்படி சங்கர மடத்துக்கு இன்னும் எந்தத் தாழ்த்தப்பட்டவனும் பீடாதிபதி ஆக்கப்படவும் இல்லை. பிராமணர்கள் அவரது காலைக் கழுவிக் குடிக்கவும் இல்லை. ஆனால் பிஎம்எஸ் வார்த்தை ஜாலம் செய்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றப் பார்க்கிறது.

அவர்களுக்கு சவால் விட்டுக் கேட்கிறோம். நீங்கள் அமைக்கப் போகும் இராமராஜ்யத்தில் தாழ்த்தப்பட்டவன் சங்கர மடத்துக்குத் தலைவராக முடியுமா? சூத்திரன் சாமியாராக முடியுமா? அப்படி முடியும் என்றால் சூத்திர சம்பூகனைக் கொலை செய்த இராமனை செருப்பால் அடிப்பீர்களா? அல்லது அந்த இராமாயணத்தைத் தீவைத்துக் கொளுத்துவீர்களா? அறிவு நாணயம் இருந்தால் அல்லது இந்த ~பாஷை| புரிந்தால் பதில் சொல்லுங்கள்!                : திராவிடர் தொழிலாளர் கழகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக