புதன், 30 நவம்பர், 2016

பல பரிவார் அமைப்புகள் பணியாற்றுவதைப்போல தொழிலாளர்துறையில் பிஎம்எஸ் பணியாற்றுகிறது|


டிசம்பர் - 6 என்றதும் நமது நினைவுக்கு வருவது அண்ணல் அம்பேத்கர் அவர்களின்  நினைவுதினம். அந்த நினைவு மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்று அந்த நாளைத் தேர்ந்தெடுத்து 400 ஆண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி என்ற நினைவுச்சின்னத்தை இடித்து நாட்டை மதவெறிக்கடாக்கியவர்களுக்கு நினைவுக்கு வருவது மசூதி இடிப்பு. அதனால்தான் அம்பேத்கருடைய வரலாற்றிலிருந்து அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாதாரின் கல்வி நிலைபற்றியும் அக்கல்வி பற்றி பிஎம்எஸ்ஸின் புருடா பற்றியும் எழுதியிருந்தோம்.  

அதேபோல ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான விஹெச்பி யின் பெயரிலும் அன்னிய ஆக்கிரமிப்பாளனால் கட்டப்பட்ட அவமானச்சின்னம் அகற்றப்பட்டநாள் என்றும் தேசிய எழுச்சிநாள் என்றும் அடுத்து காசியும் மதுராவும் இடிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் சுதந்திரம் ஆகஸ்ட் 15 என்றும் தன்மான சுதந்திரம் டிசம்பர் 6 என்றும் தொடர்ந்து ஒட்டுவார்கள். இந்த ஆண்டு ஒரு வித்தியாசம். விஹெச்பி என்பதற்குப் பதிலாக பேட்ரியாட் என்று போட்டிருந்தார்கள்.

இவர்களுடைய நோக்கம் நாட்டை மதவெறிக்காடாக்கி சிறுபான்மையினரை அச்சத்திலாழ்த்தி பார்ப்பனரல்லாதாரை மதவெறிக்கு பலிகடாவாக்கி பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதே. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமானால் இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியக் குடிமகன் என்ற உரிமையுமின்றி இங்கே வாழவேண்டும் என்று அவர்களை மிரட்டிவைக்க வேண்டும் என்பதே.

இதனை சமூகநல்லிணக்கத்தை விரும்புபவர்களும் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நிர்வாகம் அவர்களது நடவடிக்கையைக் கட்டுப்படுத்த இதுவரை உருப்படியான எதனையும் செய்யவில்லை. மனிதவளநிர்வாகம் இதுவரை அளித்த பதில் அப்படிச் செய்வது யாரென்று தெரியாது என்று கூறி அவர்களை வளரவிட்டுக்கொண்டிருந்தது.


பிஎம்எஸ்ஸை ஆரம்பித்தது அவர்கள்தான். அதன் பாதுகாவலர்களும் வழிநடத்துவதும் அவர்கள்தான் என்பதில் எள்ளவும் அய்யமில்லை. பிஎம்எஸ் சார்பாக அவர்கள் வெளியிட்ட சங்கதீபம் என்ற இதழ் (அக்டோபர் 1999ல்) இப்படிக்கூறுகிறார்கள். ~நமது தேவையறிந்து ஒரு முழுநேரப்பணியாளரை பிஎம்எஸ் சுக்காக ஆர்எஸ்எஸ் பேரியக்கம் அளித்துள்ளது. அவர்தான் சிறீமான் சங்கரசுப்பிரமணியம். அவரை வாழ்த்தி வரவேற்கிறோம்| என்று அவர்கள் கூறுகிறார்கள். பிஎம்எஸ் சங்கமடல் 2001ல் ~பரிவார் இயக்கங்கள் வவேறு துறைகளில் பணியாற்றி வருகின்றன. கல்வியில், கலை கலாச்சாரத்துறையில், விவசாயத்துறையில், பண்பாட்டுத்துறையில் பல பரிவார் அமைப்புகள் பணியாற்றுவதைப்போல தொழிலாளர்துறையில் பிஎம்எஸ் பணியாற்றுகிறது| என்று கூறுகிறார்கள்.

இப்படி இருக்கும்போது எங்களுக்கும் பிஜேபிக்கும் சம்மந்தமில்லை. எங்களுக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் தொடர்பு இல்லை என்பதெல்லாம் இளம் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்கள் உறுப்பினராக்கி பின்னர் அவர்களை ஆர்எஸ்எஸ் பணிகளில் ஈடுபடுத்துவதற்கே.  ஆர்எஸ்எஸ் பணி என்பது மதவெறியே. அதனையும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

 17-8-1997 அன்று பிஎம்எஸ் ஸின் உறுப்பினர்களை சங்கப்பணியில் ஊக்கப்படுத்தும் முகமாக பயிற்சிமுகாம் நடந்ததாக செப்டம்பர் 97 இதழில் தெரியப்படுத்துகிறார்கள். இங்கே சங்கப்பணி என்பது ராஷ்ட்ரிய ஸ்யம் சேவக் கின் பணிதான்.

ஆர்எஸ்எஸ் என்பது மூன்றுமுறை தடைசெய்யப்பட்ட அமைப்பு. அதனை தொழிலாளர் மத்தியில் வளரவிட்டால் மதவெறி தலைதூக்கும். அதனால்தான் அதற்குத் தடைவிதிக்கச் சொன்னோம். இவற்றுக்கெல்லாம் தத்துவரீதியாக பதிலளிக்க முடியாதவர்கள் நாங்கள் கூலிக்கு மாரடிப்பதாகவும் பங்குகளுக்கு பக்கவாத்தியம் வாசிப்பதாகவும் சொல்வது பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பது போன்றது. கூலிக்கு மாரடிப்பதாக நீ சொல்வது உண்மையானால் உன்னிடம் இல்லாத பணமா? அந்தக் கூலியை நீ தரலாமே! கோடிகள் இட்டழைத்தாலும் அதைத் தொடாமல் உன்னை அம்பலப்படுத்துவோம் என்பது உனக்கும் தெரியுமே!                

தொழிலாளர்களே! வெல்டர்கள் போராட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக நடவடிக்கை எடுக்கச் சொல்பவர்கள் தொழிலாளர்களின் தோழர்களா? சிந்திப்பீர்! பங்குபெறாத சங்கக் கூட்டத்திற்கு அழைப்பு ஏதும் இல்லாதபோது அழையா வீட்டு நுழையா விருந்தாளியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால்தான் தேர்தலில் எங்கள் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆதாரமில்லாமல் பேசுபவர்கள் இவர்கள் என்பதற்கு இதுவே ஆதாரம்.    

இவண் : பெல் பெரியார் தொழிலாளர் நல உரிமைச்சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக