செவ்வாய், 29 நவம்பர், 2016

நாங்கள் வாழ்வதே பெரியாரால்தான் என்று நன்றியுள்ள தமிழர் அனைவரும் சொல்கிறார்களே தவிர ஆர்எஸ்எஸ் ஸாலோ பிஜேபியாலே நாங்கள் வாழ்கிறோம் என்று எவரும் சொல்வதில்லை.

  1996ல் வாஜ்பேய் பிரதமராக இருந்தார். 2001ல் தோற்றுப் போனதால் அலுவலகத்தை உடனே காலி செய்தார். அதே காலத்தில் இங்கே பங்குபெறும் சங்கமாக இடம்பிடித்த பிஎம்எஸ் இன்னமும் அலுவலகத்தைக் காலி செய்யவில்லை. நாட்டின் பிரதமராக இருந்தவருக்குப் பொருந்துகின்ற சட்டம் ஒரு தொழிற்சங்கத்துக்குப் பொருந்தாதா?

1996ல் தோற்றுப்போன அண்ணா திமுக சங்கமும் BPEU சங்கமும் அலுவலகத்தைக் காலி செய்யாதபோது இந்த பிஎம்எஸ் காரர்கள் என்ன குதி குதித்தார்கள் தெரியுமா? குடியிருந்தவனுக்கு வீடு சொந்தமா? தொழிற்சங்கமாக 17 ஆண்டு இருந்ததால் அலுவலகம் அவர்களுக்கு சொந்தமா? என்றெல்லாம் கேலி பேசியது பிஎம்எஸ். 17 ஆண்டுகள் இருந்தவர்களையே இவ்வளவு கேலி செய்தவர்கள் அய்ந்து ஆண்டு மட்டுமே இருந்த அலுவலகத்தை பதினைந்து ஆண்டுகளாகக் காலி செய்யாமல் இருப்பதுதான் ஒழுக்கமா? ஒழுக்கம் என்பது என்ன?

மற்றவர் தன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவர் விரும்புகிறாரோ அதேபோல தானும் நடப்பதுதான் ஒழுக்கமாகும். ஆனால் இந்த பிஎம்எஸ் ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கிறது.

நாங்கள் ஒழுக்கமுள்ளவர்கள்தான். இதோ உடனே காலி செய்கிறோம் என்று சொல்வார்கள் என்று பார்த்தால் அதைக் கேட்க நீ யார் என்கிறது. சரிää நாங்கள் கேட்க அதிகாரமில்லை. இப்பொழுது நிர்வாகம் 30ந் தேதிக்குள் காலி செய்யச் சொல்லி உனக்கு கடிதம் கொடுத்திருக்கிறது. அதற்காவது மசிவாயா? இல்லை! இல்லை! நிர்வாகத்துக்கும் அதிகாரமில்லை என்று சொல்வாயா?

இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கற்ற பிஎம்எஸ் தேவையில்லாமல் திகவையும் பெரியாரையும் வம்புக்கிழுக்கிறது. பிஜேபியோடு கூட்டு சேருகின்ற கட்சி அது திமுகவாக இருந்தாலும் எதிர்ப்போம். அதிமுக வாக இருந்தாலும் எதிர்ப்போம்.

அவர்களுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பிஜேபிக்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இடமில்லை. அவர்களோடு கூட்டுச் சேருகின்றவர்களுக்கும் இடமில்லை என்ற வரலாற்றைப் படைத்து பிஜேபியை இத்தமிழ் மண்ணில் சீந்துவாரில்லாமல் செய்தது திராவிடர் கழகம். 1996 லிருந்து 2001 வரை  ஆட்சியிலிருந்த திமுகவை அது பிஜேபியோடு உறவாக இருக்கிறது என்பதற்காக எதிர்த்தது திராவிடர் கழகம். ஆளுங்கட்சி என்பதற்காக எவரையும் காரணமில்லாமல் ஆதரிப்பதில்லை.

 அதேபோல கோயில்களும் கும்பாபிஷேகங்களும் திருவிழாக்களும் பெருகி விட்டதாம். அதனால் பெரியார் கொள்கைக்கு இடமில்லையாம். அற்ப சந்தோஷப்படுகிறது பிஎம்எஸ். பக்தி மட்டுமா பெருகி இருக்கிறது. சங்கராச்சாரியின் யோக்கியதையும்ää சாமியார்களின் யோக்கியதையும் நார்நாராகக் கிழிந்து தொங்கிக்கொண்டும் இருக்கிறது.

தேர்த்திருவிழாக்களில் நகைப்பறிப்பும் வழிப்பறியும்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்காக அவையெல்லாம் நியாயம் என்று சொல்ல முடியுமா?

பக்தியுள்ள தமிழன் அவன் பட்டையடிப்பவனாக இருந்தாலும்ää மொட்டை போடுபவனாக இருந்தாலும்  பெரியார் இல்லையென்றால்; நாங்கள் மனிதனாகவே ஆகியிருக்க முடியாது. நாங்கள் கல்வி கற்றதும்ää வேலை வாய்ப்புப் பெற்றதும் பெரியாரின் உழைப்பால்தான். எனவே நாங்கள் வாழ்வதே பெரியாரால்தான் என்று நன்றியுள்ள தமிழர் அனைவரும் சொல்கிறார்களே தவிர ஆர்எஸ்எஸ் ஸாலோ பிஜேபியாலே நாங்கள் வாழ்கிறோம் என்று எவரும் சொல்வதில்லை.

பெரியார் பெயரைச் சொல்லாமல்பெரியார் படத்தைப் போடாமல் திராவிட என்கின்ற சொல்லை உச்சரிக்காமல் யாரும் இங்கே அரசியல் நடத்த முடியாது. எனவே நீ எவ்வளவு பம்மாத்துப்பண்ணினாலும் இங்கே மீண்டும் நீ வெற்றி பெற முடியாது. எனவே மானம் வெட்கம் சூடு சொரணை இவற்றில் எது இருந்தாலும் அலுவலகத்தை உடனே காலி செய்வது உனக்கும் நல்லது. நிர்வாகத்துக்கும் நல்லது.
  இவண்  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக