செவ்வாய், 8 நவம்பர், 2016

அய்யப்பன் மகர ஜோதி மோசடி




சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரஜோதி என்பது முக்கியமாகப் பேசப்படும். பொங்கலையொட்டிச் செல்லக்கூடிய பக்தர்கள் ஜோதி பார்க்கப் போகிறோம் என்பதை முக்கியமாகப் பேசுவார்கள். ஆனால் இந்த மகரஜோதி என்பது மிகப் பெரிய மோசடி என்பதை அவர்கள் உணர்வதில்லை.

மகர ஜோதி என்பது உண்மையானதல்ல. கேரள அரசாங்கமே தனது அதிகாரத்தின்கீழ் பணியாற்றும் மின்சாரத்துறை ஊழியர்களைப் பயன்படுத்தி செயற்கையாகக் காட்டப்படும் தீபம் என்பதனை கேரளப் பகுத்தறிவாளர்கள் 1973, 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் நிரூபித்துள்ளார்கள். இதுகுறித்து மும்பையிலிருந்து வெளிவந்த ~பிளிட்ஸ்| ஏடு (16.1.1982) படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டது. கேரள மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோஸப் எடமருகு, கேரள மாநில முதல்வராக இருந்த ஈ.கே.நாயினார் அவர்களைச் சந்தித்து சொன்னபோது அவரும் இதை ஒப்புக்கண்டுள்ளார் அதனைத் தடை செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்.

இப்பொழுது அடுத்தடுத்து பல தரப்புக்களிலிலருந்தும் உண்மைகள் ஒப்புக் கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவி;ட்டன. ~தெகல்கா| ஆங்கில இதழ் (21.6.2008) சில உண்மைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ந் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மஹாராஜா குடும்பத்தைச் சேர்ந்த பி.ரவிக்குமார் என்பவர் ~எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்த வேண்டும் என்று கூறி ஆட்களை அனுப்புவார்கள்| என்று ஒப்புக்கொண்டார்.

இந்தியா விடுதலை அடைந்தபிறகுதான் காட்டு இலாகாவும் மினசாரத்துறையும் சேர்ந்து மோசடியைத் தொடங்கினர். கற்பூரத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மேடு மோசடியை அம்பலப்படுத்திட பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973 இல் 24பேர் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தை தெளிவிக்க முயற்சித்தனர். கேரள அரசு அவர்களைக் கைது செய்து வழக்குத் தொடுத்தது. இந்தியக் குற்றவியல் சட்டப்படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

  1980ம் ஆண்டு திருச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக்காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு மகரவிளக்கை மனிதன்தான் இயக்குகிறான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். தேவஸம் போர்டு தலைவர் சி.கே.குப்தனும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் மோசடி உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார்| என்று ~தெகல்கா| வெளியிட்டது.

இதற்கு மேலும் என்ன ஆதாரம் வேண்டும் அய்யப்பன் மகர ஜோதி மோசடி என்பதற்கு? மோசடி என்று தெரிந்த பிறகும் ஓர் அரசு இதனை அனுமதிக்கிறது என்றால்ää அரசே மோசடிக் குற்றத்திற்கு ஆளாகி விட்டது என்பதுதானே பொருள்?

இதற்குப் பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றால்; பக்தி என்ற பெயரில் எதைச் சொன்னாலும் அறிவுகொண்டு சிந்திக்க மாட்டார்கள் என்பதுதானே இதன் பொருள்?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக