ஞாயிறு, 20 நவம்பர், 2016

பிராமணர்கள் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத யாரும் வடித்துக் கொட்டும் மன்னனாக இருந்தாலும் பார்த்துவிடக் கூடாது.



திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் மிக பிரம்மாண்டமான அளவில் இன்றும் உள்ளது. அது கேரள அரசின் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்கு நூற்றுக்கணக்கான அறைகள் உள்ளன.

அவற்றில் 3000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடக்கூடிய சாப்பாட்டு அறை (போஜன அறை) உள்ளது. அதில் யார் சாப்பிடுவது? அனைவரும் பார்ப்பனர்கள்தான். நாள்தோறும் 3000 பார்ப்பனர்களுக்கு மூன்று வேளையும் வடித்துக்கொட்டுவதே மன்னனின் முக்கியக் கடமையாகும். அதில் எந்தவித பங்கமும் வந்துவிடக்கூடாது.

அவ்வாறு பிராமணர்கள் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத யாரும் வடித்துக் கொட்டும் மன்னனாக இருந்தாலும் பார்த்துவிடக் கூடாது. அப்படிப்பார்த்து விட்டால் சாப்பாடு தீட்டாகிவிடுமாம். பார்ப்பனர்கள் அதைச்சாப்பிட மாட்டார்களாம்.

ஓருநாள்; அதை அறியாமல் மன்னனின் மகன் ஏழு வயதுச்சிறுவன் பார்ப்பனர்கள் சாப்பிடுவதை எட்டிப்பார்த்து விட்டான். மன்னனின் மகனாக இருந்தாலும் பார்ப்பனனல்லாதவனாச்சே! அவன் பார்த்ததால் சாப்பாடு தீட்டாகிவிட்டது என்று அனைத்துப் பார்ப்பனர்களும் சாப்பிடாமல் வெளியே வந்துவிட்டனர்.

 மன்னன் அதை அறிந்து அந்தப்பார்ப்பனர்களிடம் வந்து எவ்வளவோ கெஞ்சிப்பார்க்கிறான். மன்னிக்க அவர்கள் தயாராக இல்லை. 3000 பேர் சாப்பிடக்கூடிய அவ்வளவு சாப்பாட்டையும் அப்படியே குழி தோண்டிப் புதைத்துவிட்டு ( வேறு யாரும் சாப்பிட்டாலும் தீட்டாகி விடுமாம்) புதிதாக வேறு சாப்பாடு சமைத்துப் போட்ட பிறகே அவர்கள் சாப்பிட்டார்களாம்.

இதுதான் மன்னராட்சிக்காலத்தில் நாடெங்கும் நடந்த கதை. இப்படி பார்ப்பனர்களுக்கு சமைத்துப்போட்டே பல சாம்ராஜ்யங்கள் அழிந்துபோயிருக்கின்றன என்பதுதான் இந்நாட்டு வரலாறு.

மன்னராட்சிக் காலத்தில் மனுதர்மம்தான் கோலோச்சியது. அந்த மனுதர்மம்தான் இந்த பிராமண போஜனத்தை மன்னர்களுக்கு முக்கிய கடமையாகக் கூறுகிறது.

அந்த மனுதர்மத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் ஆர்எஸ்எஸ். அந்த ஆர்எஸ்எஸ் ஸின் சங்பரிவார்களான பாஜக. பிஎம்எஸ் உட்பட தர்மம் தர்மம் என்று பேசுவது எல்லாம் அந்த வருணாசிரம தர்மம்தான்.

அந்த வர்ணாசிரமத்தின்படி பந்தி முழுக்க தனக்கே சொந்தம். அந்தப் பந்தியில் வேறு யாரும் அமரவும் கூடாது. பந்தியை யாரும் பார்த்துவிடவும் கூடாது  என்று சொல்பவர்கள்தான் பார்ப்பனக் கூட்டம். அந்தக் கூட்டம்தான் மற்றவர்களைப்பார்த்து பந்திக்கு முந்திக்கொண்டு ஓடுவதாகக் கதைக்கிறது.

தொழிலாளர்களே! அந்தக் கூட்டத்திடம் எச்சரிக்கையாக இருப்பீர்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக